ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 24 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில், இன்னும் முடிவுக்கு வராம போர் நடைபெற்று வரும் நிலையில் கவிஞர் வைரமுத்துவின் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் சிதைந்துவரும் நிலையில் இரு தரப்பிலும் உயிர்ப் பலிகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அத்துடன் உக்ரைனிஞ் முக்கிய பகுதைகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக நாடுகள் ரஷ்யாவின் கொடூர தாக்குதல்களுக்கு கண்டம் வெளியிட்டு வரும் நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போரை நிறுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து ரஷ்ய அதிபர் புதினிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு பதிவை செய்துள்ளார். அதில்,
“போரை நிறுத்துங்கள் புதின் மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும் கரும்புகை வான் விழுங்கும் பகலை இருள் குடிக்கும் கடல்கள் தீப்பிடிக்கும் குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும் ஆயுதம் மனிதனின் நாகரிகம்; போர் அநாகரிகம் வரை நிறுத்துங்கள் புதின்” எனக் வைரமுத்து கூறியுள்ளார்.