ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில், கலந்துரையடல் ஒன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இதன்போது தேசிய அரசாங்கமொன்று செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லையென, அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டை தற்போதைய பொருளாதார நிலைமையில் இருந்து மீண்டெழுவதற்கு, தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது என்றும். அதில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பிக்கள் ஐவரை, நீக்கிவிட்டு அந்த வெற்றிடத்துக்கு ஐ.தே.க உறுப்பினர்களை நியமிக்கவும் நிதியச்சர் பசில் ராஜபக்ஷ, இணக்கம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகின்றது.
அத்துடன் அந்த தேசிய அரசாங்கத்தில் நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷவே செயற்படுவார் என்றும் அந்த தகவல்கள் கசிந்திருந்தன.
இந்த நிலையில் , தேசிய அரசாங்கம் ஒன்றுக்குச் செல்லவேண்டிய தேவையில்லை. சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுமாறு ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.