உக்ரைன், ரஷ்யா யுத்தத்தை அடுத்து சமையல் எரிவாயுவின் விலை முன்னெப்போதும் இல்லாதவாறு உலக சந்தையில் அதிகரித்துள்ளது.
2008 ஜுலை மாதத்தின் பின்னர் சமையல் வாயுவின் அதி உச்ச விலை இதுவாகும். முன்பிருந்த விலையைவிட 4.11 டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவிலிருந்து எரிவாயு மற்றும் எரிபொருள் கொள்வனவு செய்வதை தடை செய்தது தொடர்பாக பிரிட்டன் எச்சரிக்கை விடுத்ததுடன் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு விளைவைப் போலவே யுக்ரேன் ரஷ்யா போரின் காரணமாக உலக சந்தையின் மசகு எண்ணெயின் விலை பெரல் ஒன்று 139 டொலர்களாக அதிகரித்துள்ளது.

