கொக்கல – மோதரகொட பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த இருவருக்கும் இடையில் சிறிது காலமாக, படகு தொடர்பான தகராறு ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சந்தேகநபர், இன்று அதிகாலை மதுபோதையில் பிரவேசித்து அவரது சகோதரர் மீது தாக்குதலை மேற்கொண்டதன் பின்னர் கொக்கல ஓயாவுக்குள் தள்ளியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து காயமடைந்த நபர், பிரதேசவாசிகளால், மீட்கப்பட்டு கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.