பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று பாரிய குண்டுவெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இதில், 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் 50இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் இவ்வாறு குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளிவாசலில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.