கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிகள் வழங்கும் ரசீதுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்களுக்கு உலகளாவிய பற்றாக்குறை உள்ளது.
கார்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த அட்டைகளை இறக்குமதி செய்த லேக்ஹவுஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஜான் புல்லி தெரிவித்தார்.
மேலும், டொலர் தட்டுப்பாடும் அதன் இறக்குமதியை பாதித்துள்ளது. இந்நிலைமை காரணமாக புதிய கடன் அட்டைகள் முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் காலாவதியான அட்டைகளுக்கு புதிய அட்டைகள் பெறுவதில் மக்கள் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.