திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ரத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளthu.
விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதவான் முன்னிலையில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறிய பொலிஸார், விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.