மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன் தரும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய நபரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். பணம் பல வழிகளில் வந்து சேரும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நாங்கள் எதிர்பார்த்த விஷயங்களுக்கு எதிர்மறையாக நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனக்குழப்பம் இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் குடும்ப தகராறுகளை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து புதிய செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடமையில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு செயலையும் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. தேவையற்ற பதட்டம் நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கவலையை மறந்து உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். விட்டு சென்ற உறவுகளை மீண்டும் சந்திக்க நேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நீடிக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை உருவாகும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு நிதானமாக முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தனலாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டி முன்னேறும் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு முக்கிய முடிவையும் தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் ஏற்பட்டுக் கொண்டிருந்த இழுபறியான வேலைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த தேவையில்லாத மனக் கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியம் அக்கறை தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மீளா துயரத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுபகாரியத் தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணம் இரட்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.