லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் இப்படத்தில் தனக்கு பெயர் வர முழுக்க முழுக்க விஜய்தான் காரணம் என சமீபத்திய பேட்டியில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
மாஸ்டர் படத்தில் தனக்கு அதிகமான வசனங்கள் வருவதற்கு காரணம் நடிகர் விஜய் தான் என விஜய் சேதுபதி கூறியுள்ளார். அதாவது படம் முழுக்க விஜய் அவர்களை சற்றுத் தாழ்வுப் படுத்தி பேசப்படுவது போல் வசனங்கள் இடம் பெற்றிருக்கும் உதாரணத்திற்கு வாத்தி நீ சொல்லி நிறைய பேர் கேட்டு இருக்காங்க ஆனா நான் சொல்றதை நீ கேளு போன்ற மாதிரி வசனங்கள் இடம் பெற்றிருக்கும்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் எந்தவொரு நடிகரும் இந்த மாதிரி வசனங்களை இருக்கக் கூடாது என்றுதான் நினைப்பார்கள். ஆனால் விஜய் அவர்கள் இதை பற்றி எதுவும் கூறவில்லை எனக் கூறினார்.
மேலும், தன்னிடம் அல்லது இயக்குநரிடம் விஜய் இந்த வசனம் தேவைதானா அல்லது ஒரு சிறிய கண்ணசைவு காட்டி இருந்தால்கூட தான் பேசிய வசனங்கள் எதுவுமே படத்தில் இடம் பெற்றிருக்காது.
ஆனால் விஜய் தான் பேசிய வசனத்தை பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார். அதனால்தான் படத்தில் தான் பேசிய பல வசனங்கள் இடம் பெற்றதாக கூறினார். அதேபோல் தலையில் கொம்பு வைத்தபடி ஒரு சீன் நடித்திருப்பேன். அதனை டப்பிங்கில் பார்த்துவிட்டு விஜய் கைதட்டி சிரித்து விஜய்சேதுபதி சூப்பராக நடித்திருக்கிறார் என கூறியதாக கூறினார்.
அதாவது நான் இவ்வளவு எமோஷனலாக இந்த வசனத்தை பேசிக்கொண்டிருக்கிறேன் ஆனா இந்த ஆளு தலையில் கொம்பு வச்சுக்கிட்டு எவ்ளோ அழகா நடிச்சிருக்காரு பாருங்க என லோகேஷ் கனகராஜ்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
இந்த மாதிரி விஜய் அவர்கள் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டதால் தான் மாஸ்டர் படத்தில் தனக்கு பெயர் வர முக்கிய காரணமாக அமைந்ததாக கூறினார். மேலும் படம் வெளிவந்த போது பலரும் விஜயை விட விஜய் சேதுபதி நடிப்புத் தான் அருமையாக இருக்கிறது எனக் கூறினார்கள்.
ஆனால் அதற்கு விஜய் தான் காரணம் என்பது பலருக்கும் தெரியாது என கூறினார். விஜய் அவர்கள் தனக்கு பவர்ஃபுல்லான வசனங்கள் வைத்துவிட்டு படத்தில் பெரிய அளவில் பெயர் வாங்கி இருக்கலாம் ஆனால் அவர் தன்னை விட அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் கூறியதால் தான் படத்தில் தனக்கு பெரிய அளவில் பெயர் வரக் காரணமாக அமைந்ததாக கூறினார்.