மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் லட்சுமனன் தேவ பிரதீபன் இன்று காலை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் உத்தியோகத்தர்கள் சிலரால் தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்பொது தனது மகனின் நினைவாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் உத்தியோகத்தர்கள் அகற்றுவதாக கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அந்த செய்தியை சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் லட்சுமனன் தேவ பிரதீபன் அவர்களை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் உத்தியோகத்தர்கள் செய்தி சேகரிக்க விடாது தடுத்ததோடு அவ்விடத்தில் நின்ற சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் தொடர்ச்சியாக இலங்கையில் ஊடக சுதந்திரமும் ஊடகவியலாளரின் சுதந்திரமும் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றது .
இதன்படி அரச அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்ற செயற்பாடுகள் இலங்கையில் தொடர்ந்து கொண்டே செல்கிறது.