சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வாசஸ்தலத்தின் மின் கட்டணமான ஒரு கோடியே 20 இலட்சத்து 56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை (12,056,803.38) உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், அமைச்சர் கெஹலியவின் குறித்த வீட்டின் மின் கட்டணம் செலுத்தப்படாது இருந்து வந்துள்ளதாக மின்சார சபை கூறியுள்ளது.
அதன் பிரகாரமே இவ்வளவு பாரிய தொகை கட்டணமாக சேர்ந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இத்தகைய மிகப் பெரும் தொகை மின் கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில், அதனை செலுத்தச் சொல்வற்காக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கடந்த 2021 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி , அமைச்சர் கெஹலியவின் வீட்டுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.