மத்திய வங்கி பிணைமுறி கொள்ளைப் பணம் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவிற்கு லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்டு பகிரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வனஜீவராசிகள் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அமைச்சருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.