இலங்கை போன்ற தீவுகளில் இராணுவ தரையிறக்கத்தின் போது கடற்பகுதிகளை பிடித்து தரையிறங்கிவிட்டால் தனது ஆதிக்கத்தினை செலுத்தி படிப்படியாக ஏனைய இடங்களை கைப்பற்றிவிடலாம் என்பதே சீனாவின் அரசியல் நகர்வு என பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளர் ரவி தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் முக்கிய கடற்பகுதிகளை இலக்கு வைக்கும் சீனாவின் நகர்வுகள் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான நகர்வே ஆனையிறவு பகுதியிலும் நடைபெற்றதுடன், எந்தவித ஆரவாரமும் இன்றி கொழும்பை நோக்கி நகர்ந்து போட்சிட்டியை சீனா கைப்பற்றியுள்ளது.
கொழும்பிலிருந்து வடக்கு மேன்முனை வரையிலான கடற்பகுதி இந்தியாவை பொருத்தவரையில் மிக முக்கிய பகுதியாகும். அதனை நோக்கி தற்போது சீனா மெல்ல மெல்ல நகர்ந்து சென்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.