நாடளாவிய ரீதியாக வலயங்கள் அடிப்படையில் மின்சாரம் துண்டிக்கப்படுகின்ற நிலையில் சுற்றுலா வலயங்களை அதிலிருந்து விடுவிக்குமாறு சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபயவிடன் அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தநிலையில் மின் துண்டிப்பு சுற்றுலாத்துறையைப் பாதிக்கும் எனச் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.