புள்ளிவிபர மற்றும் தொகை மதிப்பீட்டு திணைக்களம் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நுகர்வோர் சுட்டெண்ணை வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த ஜனவரி மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 16.8 வீதமாக இருந்தது.
உணவு பணவீக்கம் 24.4 வீதமாக இருந்தது.
அதேநேரம் உணவல்லாத பணவீக்கம் 10.2 வீதமாக இருந்தது.
2022ஆம் ஆண்டு ஜனவரியில் 161.0 வீதமாக இருந்த பணவீக்கம், மாதாந்த அடிப்படையில் 166.0 வீதமாக அதிகரித்துள்ளது.
மாதத்துக்கு மாதம் அதிகரிப்பு பங்களிப்பு 1.71 வீதமாக இருந்தது.
உணவல்லாத பணவீக்க மாற்றம் 1.35 வீதமாக அதிகரித்திருந்தது.
இதேவேளை முக்கிய பணவீக்கம் மாதாந்த அடிப்படையில் 10.8 வீதத்தில் இருந்து 12.9 வீதமாக அதிகரித்துள்ளது.