மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் புரிந்து வைத்த விஷயங்கள் வேறொன்றாக தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நாணயத்துடன் இருப்பது தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முக்கிய பயணங்கள் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும். சுய தொழிலில் இருப்பவர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு பணியில் அக்கறை தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மற்றவர்களுடைய ஆலோசனை தேவை. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பண விஷயத்தில் கவனம் தேவை. தொலை தூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். ஆரோக்கியம் வலுவாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் சுயமாக முடிவு எடுப்பது நல்லது. மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டால் மன குழப்பம் அடைவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சமயோசிதமாக செயல்படுவது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொலை தூர இடங்களில் இருந்து வரக்கூடிய செய்திகள் தடைகளை அகற்றும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் உறுதியாக இருப்பது நல்லது. தேவையற்ற நபர்களுடைய அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கண்ணால் காண்பது பொய்யாக இருக்கலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் தோல்வி அடையும். எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் நம்பி இருந்தீர்களோ அந்த ஒரு விஷயம் உங்களுக்கு இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய சரக்குகள் விற்பனை ஆகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடினமான உழைப்பு தேவை. நீண்ட பல கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். சுயமதிப்பு உங்களை முன்னேற செய்யும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்யோகஸ்தர்களுக்கு மனநிறைவு இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் மகிழ்ச்சியாக இருக்க கூடிய நல்ல நிகழ்வுகள் நடக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கூட்டு தொழில் புரிபவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நாணயம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று ஆக இருக்கக் கூடும் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் அகலும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் நீங்கும்.