இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீது கடந்த 2010 ஆம்ஆண்டு நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் பின்னணியில் -பாகிஸ்தான் – அமெரிக்க பிரஜையான டேவிட் ஹெட்லி இருந்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மும்பாய் குண்டு வெடிப்பையும் திட்டமிட்டவர்களில் ஒருவர். புனே நகரில் நடந்த குண்டு வெடிப்பின் பிரதான சூத்திரதாரி டேவிட் ஹெட்லி. அவர் அமெரிக்காவில் வசித்து வந்தார். குண்டு வெடிப்புடன் அவருக்கு இருக்கும் தொடர்பை கண்டுபிடிப்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. அவர் அமெரிக்க பிரஜை என்பதே இதற்கு காரணம்.
எனினும் இந்திய புலனாய்வுப் பிரிவு பணியை கைவிடவில்லை. இந்தியாவின் அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம், பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க அமெரிக்காவின் உதவியை கோரியது. சாதாரணமாக அமெரிக்கா தமது நாட்டு பிரஜைகளை சாட்சியங்கள் இன்றி வெளிநாடுகள் விசாரணை நடத்த இடமளிக்காது.
எனினும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் திறமையாக சாட்சியங்களை கண்டறிந்து, தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அவர் தான் என அமெரிக்காவுக்கு நிரூபித்து காட்டினர். இதனையடுத்து அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்கா, அவருக்கு எதிராக மும்பாய் குண்டு வெடிப்புச் சம்பந்தமாக வழக்கை தாக்கல் செய்து, அவரை 35 ஆண்டுகளுக்கு சிறையில் அடைத்தது. டேவிட் ஹெட்லி சிறையில் இருக்கும் போது, இந்திய விசேட நீதிமன்றம் இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக காண் ஒளி ஊடாக வழக்கு விசாரணைகளை நடத்தியதுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி என தீர்ப்பளித்தது.
இந்தியாவின் ஜேர்மன் வெதுப்பக குண்டு வெடிப்பின் பிரதான சூத்திரதாரிக்கு இப்படிதான் தண்டனை வழங்கியது. அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது, அவர் இந்தியாவுக்குள் இருக்கும் போது அல்ல, அமெரிக்காவில் இருக்கும் போது!.
புனே வெதுப்பக குண்டு வெடிப்பு 2010 ஆம் ஆண்டு நடந்தது. 2013 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குள் இருந்த சிறிய சூத்திரதாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் அமெரிக்காவில் இருந்த பிரதான சூத்திரதாரி அங்கு சிறைக்கு அனுப்பபட்டார்.
அப்படியானால், இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள்?
ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடந்து சில தினங்களில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய வணக்கத்திற்குரிய கர்தினால், அன்றைய மைத்திரி – ரணில் அரசாங்கம், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை சரியாக நடத்தவில்லை எனக் கூறினார். “ வேலை நன்றாக நடப்பதாக தெரியவில்லை. முடியாது விட்டால், எங்களிடம் ஒப்படையுங்கள்” என கர்தினால் கூறினார்.
அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, விமல் வீரவங்ச, வாதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உட்பட பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கொழும்பு ஆயர் இல்லத்தில் கர்தினாலை சந்தித்த பின்னரே அவர் இதனை கூறியிருந்தார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறியது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அமெரிக்காவின் எஃப்.பீ.ஐ. உட்பட வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் தலையிடுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த கட்சியினர் கூறினர்.
அத்துடன் தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரிகளின் தொலைபேசி தரவுகளை வெளிநாட்டு புலனாய்வாளர்கள் தமது நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் நேரில் பார்த்தவர்களை போல் தெரிவித்தனர்.
குண்டு வெடிப்புக்கு நேரடியாக பொறுப்புக் கூற வேண்டிய சஹ்ரான் குழுவினரை பாதுகாத்த முஸ்லிம் தலைவர்கள் மைத்திரி- ரணில் அரசாங்கத்திற்குள் இருப்பதாகவும் தாக்குதலுக்கு மறைமுகமாக பொறுப்புக் கூற வேண்டிய வெளிநாடுகள் மைத்திரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்ததாக பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கர்தினாலும் கத்தோலிக்க திருச்சபைக்கும் கூறினர்.
இதனால், மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறிய முடியாது என அவர்கள் உறுதியாக குறிப்பிட்டனர்.
தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய குண்டுதாரியின் தந்தையின் வர்த்தக நிறுவனத்திற்கு மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்த நிசார்ட் பதியூதீன், செம்பு உலோகத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கி இருந்தார் என கூறப்பட்டது.
அன்றைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, தாக்குதல் நடந்த நாளன்று இரவு அரபு நாட்டில் இருந்து வந்த சிலரை மறைத்து அழைத்துச் சென்று இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கும் காண் ஒளி நாடு முழுவதும் வைரஸ் போல் பரவியது.
அதேபோல் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் குண்டுதாரி சஹ்ரானை சந்திக்கும் காண் ஒளியு் கசிந்தது. இந்த காண் ஒளியுடன் முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன், குண்டுதாரிகளின் தந்தைக்கு வழங்கிய செம்பு உலோக கொள்வனவு அனுமதிப் பத்திரத்தை இலங்கையின் பிரதான தனியார் தொலைக்காட்சிகள் ஹெலிவூட் ஆங்கில படத்தை போன்று முழு நாட்டுக்கும் காட்டின.
“இவர்கள் ஆட்சியில் இருந்தால் பயங்கரவாதிகள் நாட்டை பிடிப்பார்கள்.. முழு நாட்டிலும் குண்டுகள் வெடிக்கும்” காண் ஒளிகள் மற்றும் தொலைக்காட்சிகளை பார்த்த மக்கள் கூறினர்.
ஆனால், அந்த காண் ஒளிகள் தற்போது எங்கே போயின…? செம்பு உலோக கொள்வனவு அனுமதிப்பத்திரங்கள் எங்கே?.
எவரும் தற்போது அவை பற்றி பேசுவதில்லை. முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் விடுதலை செய்யப்பட்டது மாத்திரமன்றி அவரது கடவுச்சீட்டு விடுவிக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுடன் சம்பந்தப்படுத்தி குற்றம் சுமத்தப்பட்ட ஹிஸ்புல்லா, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக மட்டக்களப்பில் இறங்கி வேலை செய்தார். ஹிஸ்புல்லா தற்போது மட்டக்களப்பில் மன்னரை போல் இருந்து வருகிறார்.
கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதும் 2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சதித்திட்ட வழக்கில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாதாடிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கூறி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாகவும் அவருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்திருப்பதாகவும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் தனியார் ஊடகங்கள் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடியும் வரை செய்திகளை உருவாக்கி வெளியிட்டு வந்தன.
2020 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும் உடனடியாக பொதுஜன பெரமுன அரசாங்கம், றிசார்ட் மற்றும் ஹக்கீம் ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு வளைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை உருவாக்கி, 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை தவறாக நடத்துவதாக கூறியவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அமெரிக்க இராணுவம் இலங்கைக்கு வந்து, வடக்கு கிழக்கில் கூட்டு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
அப்படியானால் எங்கே அந்த பிரதான சூத்திரதாரி..?
கர்தினால் மாத்திரமல்ல குழு கத்தோலிக்க திருச்சபையினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எந்த நடக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள முடியவில்லை கூறி வருகின்றனர். அன்று பிரதான சூத்திரிதாரியை கண்டுபிடிக்க கர்தினாலை சுற்றியும் அழைத்துச் சென்ற பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், தேசப்பற்றுள்ள பௌத்த பிக்குகள் எவரும் தற்போது கர்தினால் மற்றும் கத்தோலிக்க திருச்சபையினருடன் இல்லை.
இதற்கு பதிலாக பிரதான சூத்திரதாரி எங்கே என்று கேட்டதற்காக சிறில் காமினி, ஜூட் கிறிஸ்சாந்த போன்ற கத்தோலிக்க மத குருக்கள் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
உலக கத்தோலிக்க திருச் சபையின் பாப்பரசர் என்ற பதவியானது, போலாந்தின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை கவிழ்த்து, உலகில் கம்யூனிஸ அரசாங்கங்களை வீழ்த்தி, சோவியத் யூனியனை துண்டுகளாக பிளவுப்படுத்தி தரை மட்டமாக்க அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் வழியை ஏற்படுத்திக்கொடுத்த பதவி!.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கத்தோலிக்கர்களின் கண்ணீரையும் திருச்சபையையும் கேலிக்கு எடுத்துக்கொண்டால், அது கண் சிவந்து போகும் கேலியாக மாற கூடிய வாய்ப்பானது, குறைத்து மதிப்பிடக் கூடிய ஒன்றாக இருக்காது.