இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் மெத்திவ் வேட் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை விக்கெட்களை வீழ்த்தினர்.
இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.
அணித்தலைவர் தசுன் சானக 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் கேன் ரிச்சட்சன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதற்கமைய, அவுஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது