மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அரசு வழி காரியங்கள் சாதக பலனை கொடுக்க இருக்கிறது. கற்பனையில் மிதப்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலனைப் பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்ககளுக்கு நீண்ட நாள் மனதில் வேண்டிக் கொண்டிருந்த விஷயம் ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மனக்கவலைகளை தூக்கி எறிந்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல பலன் காண யோகமுண்டு. சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகளை எளிதாக தீர்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் அதிகாரம் செல்லுபடியாகும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. உங்களுடைய அலட்சியம் பேரிழப்பை ஏற்படுத்தும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்கோபம் குறைப்பது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் தேவை.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் போகிறது. புதுமையை படைக்கக் கூடிய இனிய நாளாக இருப்பதால் ஜெயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் வருமானம் பெருகும். குடும்பத்தில் இருந்து வந்த சிறுசிறு சண்டை சச்சரவுகள் நீங்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களை எளிதாக இனம் கண்டு கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத் தேவைகள் எளிதாக பூர்த்தியாகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக அமைய இருக்கிறது. திடீர் பயணங்கள் மூலம் புதிய நட்புகள் வளரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். மனதில் ஒரு விதமான புது உற்சாகம் தெரியும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆன்மிக பணியில் நாட்டம் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் மனதை வருட செய்யும். குடும்பத்தில் சுப காரிய தடைகள் விலகி உங்களை திக்குமுக்காட வைக்கும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களில் சாதக பலன் பெறுவீர்கள். ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எத்தகைய தடைகளையும் தகர்த்தெறிந்து கூடிய தைரியம் கொண்டவர்களாக திகழப் போகிறீர்கள். உங்களுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருப்பது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகி வருமானம் பெருக துவங்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து உங்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சாதக பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். மனதை ஒருமைப்படுத்துவது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற பலன்களை கொடுக்க இருப்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன் இருப்பது உசிதமானது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியத் தடைகள் நீடிக்கும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான அலைச்சல் சோர்வை ஏற்படுத்தலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண்பழி ஏற்க நேரம் என்பதால் சமயோசிதமாக செயல்படுவது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பேச்சு வார்த்தைகளை வெளியிடங்களில் பிரயோகிக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு சிக்கல் தீரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இனிமை தேவை. இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் இருக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.