இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், இலங்கைக்கான தூதுவராக பதவியேற்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
தனது சமூகஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜூலி சுங், இலங்கையின் கடந்த காலம், பன்முகத்தன்மை, கலாச்சாரம் மற்றும் நவீன சிக்கலான தன்மை உள்ளிட்டவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்வேன் என நம்புவதாகக் கூறினார்.
இரண்டு நூற்றாண்டுகளாக, அமெரிக்கப் பொருளாதாரம் அமெரிக்க கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர் சிந்தனை மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்த பல புலம்பெயர்ந்தோரால் இயக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கை சிவில் சமூகம், வர்த்தக சமூகம் மற்றும் இளைஞர்களுடன் தனிப்பட்ட உறவுகளை வலுப்படுத்துவதில் தூதுவராக தனது பணியை வடிவமைக்கும் என இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் தனது சமூகஊடகத்தில் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர், இலங்கையின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்ததுடன், பல தரப்பினரைச் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜூனியர் பதவியேற்க உள்ளார் திருமதி சுங் நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்