சந்தேக நபர்கள் பல கோடி சொத்துக்களை கொள்ளையடிக்க, பிரபல வர்த்தகரான லலித் கொத்தலாவலவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கோல்டன் கீ வைப்பாளர்கள் நீதிச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி லலித் கொத்தலாவலவை பலவந்தமாக தடுத்து வைக்கும் குழுவே இந்தச் சதியை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் மார்கோ பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் திரு.கொத்தலாவல தற்போது வீட்டுக்காவலில் இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட கும்பலால் அவரது மனைவியிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.