அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (17) காலை விசேட பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைக்காக அவர் இவ்வாறு அங்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் ரஞ்சன் ராமநாயக்க இராஜாங்க அமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.