திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக எஸ். நிருபா நியமிக்கப்படுள்ளார்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த எஸ். நிருபா , நிர்வாக சேவை உள்ளக பயிற்சிகளை முடித்துக்கொண்டதன் பின்னர் இந்நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இலங்கை நிர்வாக சேவை மூன்றாம் தர உத்தியோகத்தரான இவர், இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானமும் போசாக்கும் துறையில் ஆரம்ப பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.