அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச என்ற ரணசிங்க ரந்துனு முதியான்சலாகே ஷீர்சா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
இந்த வழக்கு பிரதான நீதவான் புத்திக சி ராகல முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
போலியான தகவல்களை வழங்கி ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை சம்பந்தமாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களிடம் விசாரணை முடிவடைந்ததை அடுத்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சசி வீரவங்சவின் சாதாரண கடவுச்சீட்டில் அவரது பிறந்த வருடம் 1967 என குறிப்பிட்பட்டுள்ள நிலையில், அவர் தான் பிறந்த ஆண்டு 1971 என குறிப்பிட்டு போலி ஆவணங்களை சமர்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் குற்றவியல் விசாரணை திணைக்களம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.