மாத்தறை – ஹக்மன பிரதேசத்தில் வசித்து வந்த யாசகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது கால்சட்டை பொக்கெட்டில் இருந்து சுமார் 4 இலட்சம் ரூபாக்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
ஹக்மன கொங்கல கிழக்கைச் சேர்ந்த 69 வயதான ஈ.எஸ்.விமலதாச என்பவர் கடந்த 10ஆம் திகதி தான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலுள்ள மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர் திருமணமாகாதவர் என்பதுடன் பாடல்பாடி யாசகம் பெற்றுவந்தார். உயிரிழந்தவர் அணிந்திருந்த காற்சட்டையில் உள்ளும் வெளியிலும் பொக்கட்டுக்கள் தைக்கப்பட்டிருந்ததுடன் இதில் இருந்து 384,867.00 ரூபா பணம் காணப்பட்டதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் எவரும் இல்லை எனவும் ஹக்மன பிரதேசத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இறந்தவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அவர் தங்கியிருந்த சிறிய வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர்,
அங்கிருந்த கறுப்பு நிறத்தில் இருந்த கால்சட்டைகளை பரிசோதித்த போது பல இரகசிய பொக்கெட்டுகளில் ஏராளமான பணம் இருந்தது. அதில் ரூ. 500, ரூ .5,000, ரூ15000 என வைக்கப்பட்டிருந்த பணத்தொகைகளும் எடுக்கப்பட்டுள்ளது