இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எஹலியகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வெளிநாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
எஹலியகொட பொலிஸ் பிரிவு கொடகம்பொல பரக்கடுவ பிரதேசத்தில் இராஜகிரிய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி மற்றும் நான்கு தோட்டாக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொடகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 44 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லெல்ல பிரதேசத்தில், இரத்தினபுரி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கல்லெல்ல, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.