கல்கிஸ்சை பிரதேசத்தில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கிய மூன்று பாலியல் தொழில் விடுதிகளை முற்றுகையிட்ட பொலிஸார், எட்டு பெண்களை கைது செய்துள்ளனர்.
கல்கிஸ்சை பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.நீதிமன்றத்தில் பெறப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைய பொலிஸார் விடுதிகளை முற்றுகையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் மூன்று பேர் விடுதிகளில் முகாமையாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். கல்கிஸ்சை காலி வீதி, விகாரை வீதி, 4வது ஒழுங்கை ஆகிய பகுதிகளில் இந்த விடுதிகள் இயங்கி வந்துள்ளன.
கைது செய்யப்பட்ட பெண்கள் 22 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் பயாகல, விஹாரஹேமபாலந்துர, பொக்குணுவிட்ட, கஹட்டகஸ்ஹந்திய, மடுல்சீமை, புவக்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.