புகையிரதத்தில் செல்பியெடுக்க முயன்ற யுவதியொருவர் கீழே விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற குதித்த காதலனும் காயமடைந்தார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் ஒஹியா, இதல்கஸ்கின்ன புகையிரத நிலையங்களிற்கிடையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருகையில், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் பிரான்சை சேர்ந்த இளம் ஜொடியொன்றும் பயணித்துக் கொண்டிருந்தனர். இதன்போது, செல்பியெடுப்பதற்காக புகையிரத வாயிலில் தொங்கிய யுவதி தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவரை காப்பாற்ற இளைஞனும் குதித்துள்ளார். அவர்கள் அதே ரயிலில் ஹப்புத்தளைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 1990 நோயாளர் காவு வண்டியின் மூலம் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.