யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கர்பிணிப் பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்ற சந்தேக நபர் என்ற ஒரு பிள்ளையின் தாய் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பெண் கொலை தொடர்பில் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் நீதிமன்றால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நெடுந்தீவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த நபரை 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மற்றொரு கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நபர் ஒருவரும் தானும் இணைந்தே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருந்தாக பொலிஸ் தரப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன