இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கைக்கும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இஸ்ரேல் நாட்டின் சார்பில் தூதராக செயல்பட்டு வரும் நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை , சந்தித்து அவரிடம் பதவிச் சான்றுகளை அளித்து அதிகாரப்பூர்வ இலங்கை – இஸ்ரேல் துதராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அத்துடன் நயோர் கிலான், இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, விவசாயம், நீர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இன்னும் பல துறைகளில் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக நயோர் கிலான் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்