நிதி மோசடி வழக்கில் இருந்து அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக அரச நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது