ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்ட காமினி செனரத் மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
முதலில் மல்வத்து மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் அதனை தொடர்ந்து அஸ்கிரி மஹா விகாரைக்கு சென்று அஸ்கிரி மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானரதனாபிதான தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை யதார்த்தமாக்குவதற்கு ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் அவர்களுக்கு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய மல்வத்து அஸ்கிரிய மஹாநாயக்கர்கள் நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து மக்களுக்கு சேவையாற்றுவதற்கு ஆசீர்வதிப்பதாக தெரிவித்துள்ளனர்.