மிரிஸ்ஸ கடற்கரை பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமராவை இயக்கிய குற்றச்சாட்டுக்காக ரஷ்ய பிரஜையொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மிரிஸ்ஸ கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவர் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்திருந்த ரஷ்ய புகைப்படக் கலைஞர் என்பதுடன் மிரிஸ்ஸ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் அனுமதியின்றி ட்ரோன் கமராக்களை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.