பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இணையத்தங்கள் அவ்வாறு செய்திகளை வெளியிடுவதாகவும் அதற்கு பதிலளிக்க தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான திருட்டுகள் இடம்பெற்றுள்ளதாக கூறுவது இணையத்தளங்களாகும். இணையத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு பதிலளித்தால் தினமும் அதனை செய்ய நேரிடும் என அவர் கூறியுள்ளார்.
வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் பிரதமரின் கணக்கிலிருந்து பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர், அந்த பணத்தை பிரதமருக்கு நெருக்கமானவர்களுடன் களியாட்ட நிகழ்வுகளுக்கு பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.