மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்திக்க குணதிலக (40) என்பவரும், மகன் கோஹன் (6), மகள் லில்லி (4) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர் தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அவுஸ்திரேலிய பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
மேற்கு அவுஸ்திரேலியா, போ்த் பிரதேசம் எசிங்டன் வீதியில் இந்திக்க குணதிலகவின் வீடு அமைந்துள்ளது, இவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
நேற்று பிள்ளைகளை அவர்களது தாயாரிடம் (குணதிலகவின் முன்னாள் மனைவி) காண்பிக்க வேண்டியிருந்தது. தாயார் பிள்ளைகளை பார்க்க சென்றார்.
எனினும், அவர்கள் வரவில்லை. இதையடுத்து அவர் பொலிசாருக்கு அறிவித்தார். பொலிசார் நேற்று மாலை 6.00 மணியளவில் சடலங்களை மீட்கப்பட்டனா்.
தந்தையின் சடலம் வீட்டிலுள்ள வாகன தரிப்பிடத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.
இதுதொடர்பில் மேற்கு அவுஸ்திரேலியாவின் உதவி பொலிஸ் ஆணையாளர் எலன் எடம்ஸ் “ மன உளைச்சல் காரணமாக தந்தை இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். எமக்கு கிடைக்கபெற்ற தகவல்களின் பிரகாரம் தந்தையால் இரட்டை கொலை செய்யப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்துள்ளாா். தந்தை கடந்த டிசம்பா் மாதம் 16ஆம் திகதி பேஸ் புக் சமூக வளைத்தளத்தில் 18 நிமிட காணொளியொன்றை பதிவு செய்துள்ளாா்.
அந்த காணொளியில் தனக்குள்ள மன உளச்சல் பிரச்சினைகள் தொடர்பில் கூறியுள்ளாா்.
அத்துடன், பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது என்றும் அந்த காணொளியில் தெரிவித்துள்ளாா். கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னா் தனது குழந்தைகள் இருவரதும் புகைப்படத்தைஅவரது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளாா்.
இவர் ஒரு பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கு அவுஸ்திரியோவில் ரோயல் கல்லூரி பழைய மாணவர் சங்க கிளையொன்றை ஸ்தாபித்தவர்களில் இவரும் ஒருவர்.
எசிங்டன் வீதி பொலிஸ் விசாரணைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.