வீதியோரம் நின்று ஆண்களை மயக்கி விடுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து, அவர்களின் நகை, பணத்தை திருடும் 6 பேரை கல்கிசை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கல்கிசை, தக்ஷினாராம வீதியில் குறித்த கும்பல் தங்கியிருந்த மறைவிடத்தை பொலிசார் சுற்றிவளைத்ததுடன் அங்கிருந்த இரண்டு அழகிகளையும், நான்கு ஆண்களையும் கைது செய்தனர்.
குறித்த அழகிகள் இரவு நேரங்களில் கல்கிசை தக்ஷிணாராம வீதியின் ஆரம்பப்பகுதியில் வீதியோரம் நின்று ஆண்களை பேசி அவர்களை விடுதிக்கு அழைத்து செல்வதுடன் அங்கு உல்லாசமாக இருக்க ஆண்களிடம் பணம் பெறப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.
அதன் பின்னர், விடுதி வளாகத்தில் தங்கியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கு நுழைந்து, உல்லாசத்திற்கு வரும் ஆண்களிடமிருந்து பணப்பைகள் மற்றும் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து விட்டு, அவர்களை விரட்டியடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கொள்ளைக் கும்பல் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.