இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனத்தை தற்போது தங்கத்தை ஒத்ததாக பார்க்கப்படுவதாக சர்வதேச செய்தி நிறுவனமான AFP தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கார்களின் விலைகள் வீடுகளின் விலைகளை விட அதிகமாக உயர்ந்துள்ளது.
22 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவு திவால் நிலையின் விளிம்பில் உள்ளது, பணவீக்கம் அதிகமாக உள்ளது. உணவு, மருந்து மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை சேமிக்க அரசாங்கம் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை தடை செய்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை மோட்டார் சந்தையில் புதிய வாகனங்கள் இல்லை. தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடும் புதிய வாகனங்கள் இலங்கை வீதிகளில் இருந்து விலகியுள்ளது.
பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு உலகிலேயே மிகவும் உயர்ந்த விலை செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஐந்து வருடங்கள் பயன்படுத்தப்பட்ட டொயோட்டா லேண்ட் குரூஸர் வாகனங்கள் தற்போது 62.5 மில்லியன் ரூபாய் (312,500 டொலர்) வரை விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதி தடைக்கு முன்னர் இருந்த விலையை விட இது மூன்று மடங்கு அதிகமாகும். அந்த பணத்தில் நடுத்தர வர்க்கத்தினர் கொழும்பில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்க முடியும் என AFP செய்தி ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.