மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிர்பாராத திருப்பம் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகள் தவிர்த்து எதிர்பார்ப்பை குறைத்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகாரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிப்படி தேவையற்ற அலைச்சலை தவிர்க்கவும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்தவும். சுயதொழில் புரிபவர்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் எனவே சமயோசித புத்தியுடன் செயல்படுவது உத்தமம். இறை வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூல பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பெரியவர்களுடைய ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்க கூடிய அமைப்பாக இருக்கிறது. சுயதொழில் புரிபவர்களுக்கு அதிரடியான மாற்றங்களை நிகழ்த்தக்கூடிய அமைப்பு உள்ளது. முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு துணிச்சல் வெற்றியை அடைய செய்யும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தொலை தூர இடங்களிலிருந்து நல்ல செய்திகளை தெரிவியுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற மன சங்கடங்கள் ஏற்படலாம். சகோதரர்கள் வழியே உதவிகள் கேட்டு தொல்லை செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேசும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அவசரப்பட்டு நீங்கள் பேசும் வார்த்தையில் தேவையற்ற இழப்புகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சியில் கவனம் தேவை. வெளியிட பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் ஏற்றம் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொல்லும் சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பது நல்லது. தேவையற்ற மாற்றம் தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கூடுதல் பொறுப்பு சுமை ஏற்படும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அதிக நிதானம் தேவை. அவசர முடிவுகள் லாபத்தைக் கொடுக்கும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத காரியம் அனுகூல பலன் கொடுக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்வுக்கு வரும். உங்கள் நீண்ட நாள் முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கப்பெறும். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. விடாப்பிடியாக வம்பு இழுத்துக் கொண்டிருந்தால் பகையை சம்பாதிக்க நேரும். அக்கம்பக்கத்தினர் உடைய ஆதரவு பெருகும். எதிர்பாராத நபரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பழைய பாக்கிகள் வீடு தேடி வரும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விரக்தி அடையும். தொழில் புரிபவர்களுக்கு பங்குதாரர்களின் உதவிக்கரம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவை பெறுவது நல்லது. தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தேவையற்ற மன சஞ்சலம் கொள்ளாமல் வருவது வரட்டும் என்கிற மன நிலையில் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் வந்து மறையும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் பணவரவு கிடைப்பதில் இடையூறு ஏற்படலாம். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வம்பு வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது