பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேர் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொற்றுக்குள்ளான மாணவர்கள் தற்போது பல்கலைக்கழக இடைநிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இந்த நிலையில் பல்கலைக்கழகங்களை முழுமையாகத் திறப்பது கடினம் எனவும், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடைமுறைகளுக்கு அமைய அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தக்க வைக்கப்படுவர் எனவும் பிரதி உபவேந்தர் மேலும் தெரிவித்தார்.