பாணந்துறை கேதுமதி வைத்தியசாலைக்கு முன்பாக அம்புலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் அம்புலன்ஸ் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எனினும் சம்பவத்தில் அம்புலன்ஸ் காயமின்றி சாரதி உயிர் தப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.