ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) அடுத்த வாரம் முக்கிய பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யும் அவர், டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்துவார். தொடர்ந்து வருகின்ற வாரம் செவ்வாய்க்கிழமை ஈரான் வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட எண்ணெய்க்கான நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காகவே இலங்கையிடமிருந்து தேயிலையை ஏற்றுக்கொள்வதற்காக ஈரான் ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில் ஈரான் ஒப்புக்கொண்ட ஒரு மாதத்தின் பின்னர் ஈரானிய வெளியுறவு அமைச்சரின் இலங்கை்கான இந்த விஜயம் அமையவுள்ளது.