இந்த வாரம் முதல் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த குவைத் எயார்வேஸ் விமான சேவை தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிறுவனங்கள் “டொலர் நெருக்கடி” மற்றும் விமானங்களை அதிகரிக்க விமான நிறுவனங்களின் தயக்கம், உள்ளூர் அலுவலகங்கள் நிலுவைத் தொகையை செலுத்த மறுத்ததல் போன்ற காரணங்களால் இந்த தேர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி குவைத் ஏயார்வேஸ் கூட்டுத்தாபனம், இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமானங்களை நிறுத்தியுள்ளதாக அல்-ஜரிடா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை , குவைத் ஏயார்வேஸ் கடந்த செப்டம்பரில் இலங்கைக்கான தனது நடவடிக்கைகளை உத்தியோகபூர்வ காரணங்களைத் தெரிவிக்காமல் வாரத்திற்கு ஒரு விமானத்தை மாத்திரமே செலுத்தியிருந்தது.
மேலும் இலங்கைக்கான விமானத்தின் இயக்கச் செலவுகளுடன் ஒப்பிடுகையில், விமான நிறுவனத்தின் வருவாய் மிகவும் குறைவாக இருந்தமையே இந்த தீர்மானத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.