இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஷா, டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
சானியா மிர்ஷா, 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார்.
இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 14-வது அவுஸ்திரேலியன் திறந்தநிலை டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலியன் திறந்தநிலை டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா – உக்ரைனின் நாடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
இதை தொடர்ந்து சானியா மிர்சா ஓய்வை அறிவித்துள்ளார்.