கொழும்பில் ஜே.வி.பியினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது முட்டை வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜேவிபியினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பை நோக்கிய மருதானை தொழில்நுட்ப கல்லுாரி சந்தியில் பாரிய வாகன நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது.
நாட்டின் மூலவளங்களான துறைமுகம், எரிபொருள் குதங்கள் மற்றும் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு கையளிக்கவேண்டாம் என்று கோரியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன் திருகோணமலையில் இந்தியாவுக்கு வழங்கிய எரிபொருள் குதங்கள் தொடர்பான உடன்படிக்கையை ரத்துச்செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.