நாடாளுமன்றத்தின் உணவகத்தில் உணவுகள் வீணடிக்கப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று, சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே இந்த கோரிக்கையை இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது விடுத்தார். சிங்கள ஊடகம் ஒன்றில், இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று மக்கள் உணவுக்காக கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பொதுமக்கள் கோபம் கொள்ளக்கூடிய வகையில் இந்த தகவல் அமைந்துள்ளது.
எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே கேட்டுக்கொண்டார்.