கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது.
புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள குறித்த நூலகம் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் அமையவுள்ளது.
குறித்த நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ்.இந்திய துணை தூதுவர் ராம ராஜேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அதிதிகள் விழா இடம்பெறம் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதை தொடர்ந்து அடிக்கல் நாட்டப்பட்டது.