பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டினை வைப்பதற்காக நபர் ஒருவருக்கு 50,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், எம்பிலிபிட்டி , பனாமுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம், தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அவரிடம் அரசபுலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது பணம் வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
கைக்குண்டினை வைப்பதற்கு 50,000 ரூபாய் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டதாகவும்,கைக்குண்டினை வைக்குமாறு கூறிய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.