மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதம் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் பணியில் அக்கறை செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டி யோகம் உண்டு. இதுவரை நடக்கவில்லையே என்று நினைத்த காரியம் ஒன்று நடக்க இருக்கிறது. பெண்களுக்கு துணிச்சல் அதிகரித்து காணப்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளி இடங்களில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். புதிய நட்பு உருவாகும். உத்யோகஸ்தர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீட்டிய திட்டங்களுக்கு எதிராக நடைபெற வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகள் வந்து சேரும் என்பதால் நிதானத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாளாக தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த விஷயம் முடிவுக்கு வரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை மேலும் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர் உங்களை புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். கணவன் மனைவியிடையே புதிய புரிதல் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மறுக்கப்படும். வெளியிட பயணங்களின் பொழுது ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் நல்ல பலன் தரும். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிகம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் எனவே கவனம் தேவை. கணவன் மனைவி இடையே வீண் சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். சகோதர சகோதரிகளுக்கும் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்யோகஸ்தர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை தாண்டி முன்னேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை உண்டாகும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் சலுகையை பெறுவீர்கள். அரசு வழி காரியங்கள் அனுகூல பலன் கொடுக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதிக்க நினைத்ததை தடையில்லாமல் சாதித்துக் காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சுயமாக முடிவு எடுப்பது நல்லது. மூன்றாம் மனிதர்களிடமிருந்து எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சமயோசிதமாக சிந்தித்து செயல்படுவது உத்தமம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலும் உண்டாகும். புதிய சிந்தனைகள் பெரிய வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.