யாழ்.சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து CCTV கமராக்களை வன்முறை குழு உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரியில் ஜே/300 பகுதியில் அமைந்துள்ள வீட்டின் பின்புறமாக பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் திருடும் நோக்கில் பாதுகாப்பு கமராக்கள் உடைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்