மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாமர்த்தியம் அதிகம் தேவைப்படக் கூடிய நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்தது நினைத்தபடி நடக்கும். இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதையும் ஆழமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல யோகம் தரக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே அக்கறை அதிகரிக்கும். சுயதொழில் மற்றும் வாரத்தில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் தயங்காமல் முடிவெடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிகழ்வுகள் திக்குமுக்காடச் செய்யும். புதிய வாய்ப்புகளை தவற விடாமல் பற்றிக் கொள்வது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட காரியங்களை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் சந்திக்க வேண்டிய நபர் ஒருவரை சந்திப்பீர்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முயற்சிகள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. ஆன்மீக வழிபாடுகள் குறித்த ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் பெருகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பொருளாதாரம் ஏற்றம் காணும் என்பதால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அமைதி காப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு திட்டமிட்டபடி வேலைகள் நடக்கும். ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் சாதகப் பலன் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் விருத்தியாகும். உத்தியோகஸ்தர்கள் எதையும் சமாளிக்ககூடிய தைரியத்துடன் இருப்பீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் தரும் நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பொருட் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள அமைதி காப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற வாகன ரீதியான பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகள் விலகி ஒற்றுமையுடன் இருக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு சமயோசித புத்தி உங்களை மேன்மை அடைய செய்யும். உத்யோகஸ்தர்கள் முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்தையும் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தேவையற்ற வம்பு வழக்குகள் தவிர்ப்பது உத்தமம். காலம் கடந்து சில விஷயங்கள் உங்களுக்குப் புரியவரும். சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மை உண்டாகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியைத் தரும். இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. எதிர்பார்க்கும் நேரத்தில் நண்பர்களின் உதவிகரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வெளியிட பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. பேச்சாற்றல் மூலம் எளிதில் மற்றவர்களை கவர்ந்து விடுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்களுடைய சமயோஜித புத்தியால் சிறப்பான வெற்றிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற பழிகள் நீங்கும். தடைகள் விலகி மதிப்பு அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும் இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் நீங்கி பரஸ்பர அன்பு மேலோங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் விளம்பரங்களுக்கு அனுகூலமான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வார்த்தையில் இனிமை தேவை.